‘ரஜினியின் ஆசிர்வாதம்… விஜய்யின் விருந்து…’ சென்னை ஷூட்டிங் பற்றி ஷாருக் கான் ட்வீட்

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (08:36 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கான் தொடர் தோல்விகளுக்குப் பிறகு சிறு இடைவெளிக்குப் பிறகு தொடர்ச்சியாக 3 படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தை தமிழ் இயக்குனரான அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ள நிலையில் தமிழ்க் கலைஞர்களான நயன்தாரா, யோகி பாபு, விஜய் சேதுபதி ஆகியோரும் அதில் நடிக்கின்றனர். பெரும்பாலான தொழில்நுட்பக் கலைஞர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஒரு மாதமாக சென்னையில் நடந்தது. இந்நிலையில் இப்போது சென்னை ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் ஷாருக் கான் நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் “சென்னையில் 30 நாட்கள் ஷூட்டிங். சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் வந்து வாழ்த்தியது. அனிருத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரோடு ஆழமான உரையாடல்கள். சுவையான உணவளித்த தளபதி விஜய். கனிவான உபசரிப்பு அளித்த அட்லி மற்றும் பிரியாவுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்