அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

வெள்ளி, 7 அக்டோபர் 2022 (07:40 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
சென்னையை அடுத்த பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், சோழவரம், செங்குன்றம், புழல் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் நல்ல மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 
 
தற்போது அடையாறு மயிலாப்பூர் மந்தைவெளி ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்