ஷாருக் கானின் ஜவான் பட காட்சிகள் லீக்… படக்குழு அதிர்ச்சி!

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (09:46 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இந்நிலையில் தற்போது ஷாருக் கானின் பதான் படத்தின் ப்ரமோஷன்களை முடித்துவிட்டு மீண்டும் ஜவான் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் ஷாருக் கான்.

இந்நிலையில் இப்போது ஜவான் படத்தில் ஷாருக் கான் நடித்த ஆக்‌ஷன் காட்சிகள சில இணையத்தில் லீக் ஆகி, அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளன. சமீபகாலமாக இதுபோல பெரிய நடிகர்களின் காட்சிகள் இணையத்தில் பரப்பப்படுவது வாடிக்கை ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்