இந்தியா-வங்காளதேசம் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (20:46 IST)
இந்தியா-வங்காளதேசம் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வந்துள்ள நிலையில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்
 
இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகிய இருவரும் சந்தித்து பேசினர். இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது 
 
இதனை அடுத்து இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே 7  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த சந்திப்பின்போது பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்