மீண்டும் ஒரு பார்ட் 2 படத்தை இயக்க ஆசைப்படும் செல்வராகவன்… ஓகே சொன்ன திரிஷா!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (08:02 IST)
2004 ஆம் 7ஜி ரெயின்போ காலணி தமிழ் சினிமா கண்ட மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. அந்த படத்தில் தனது மிகச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் சோனியா அகர்வால். இந்த படம் செல்வராகவனின் சினிமா கேரியரில் ஒரு மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. யுவன் இசையில் நா முத்துக்குமாரின் பாடல்கள் எவர்கீர்ன் சார்ட்பஸ்டர் ஹிட்ஸ்களாக அமைந்தன.

இதையடுத்து இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இரண்டாம் பாகத்தையும் செல்வராகவனே இயக்க, ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க அதிதி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் X தளத்தில் செல்வராகவன் தன்னுடைய ஆடவரி மதலக்கு அர்த்தலே வீரளு (யாரடி நீ மோகினி படத்தின் ஒரிஜினல்) படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார். அவரின் அந்த பதிவை பகிர்ந்த திரிஷா ‘நான் ரெடி” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்