தனுஷ் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வரும் அடுத்த வாரிசு!

திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (08:31 IST)
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க அளவு படைப்புகளைக் கொடுத்து சாதித்திருக்கும் குடும்பங்களில் ஒன்று தனுஷின் குடும்பம். தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா, அண்ணன் செல்வராகவன் என இரண்டு தலைமுறையை சேர்ந்தவர்கள் சினிமாவில் இயங்கிவந்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது மூன்றாவது தலைமுறையாக தனுஷின் குடும்பத்தில் இருந்து இன்னொரு வாரிசு திரைத்துறைக்கு வர உள்ளது. தனுஷின் அக்கா மகன் ஒருவர் விரைவில் சினிமாவில் நடிகராக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த படத்தை தனுஷே இயக்கி, அதில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்