எஸ்பிபி நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது - மருத்துவமனை

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (16:14 IST)
சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறிய நிலையில் சற்று முன் வெளியான மருத்துவமனை அறிக்கையில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னமும் ஆபத்தான கட்டத்தை அவர் தாண்டவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பியின் உடல் மேலும் கவலைக் கிடமாக உள்ளதாகவும் அவர் நுரையீரலில் ரத்தக் கசிசு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்