எஸ்பிபி சிகிச்சைக்காக சர்வதேச மருத்துவர்களிடம் ஆலோசனை: பரபரப்பு தகவல்

வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (22:11 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் கடந்த சில நாட்களாகவே கவலைக்கிடமாக உள்ளது 
 
இந்த நிலையில் தினந்தோறும் எஸ்பிபி உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வரும் என்று எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் சற்றுமுன் இன்றைய அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் எஸ்பிபி அவர்கள் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் வென்டிலேட்டர் மற்றும் எக்கோ  கருவியின் மூலம் தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் தேசிய மற்றும் சர்வதேச மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்