பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்யாத திரை உலகினர்களே இல்லை என்று கூறலாம். இந்த நிலையில் பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் எஸ்பிபி குணமாக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
எஸ்பிபி சார், மொழி, மதம், இனம், தெய்வ நம்பிக்கையும் இது எல்லாவற்றையும் அப்பாற்பட்டு நமக்கு ஒரு நல்ல நண்பர் இருக்கிறார் என்றால் அவர் எஸ்பிபி அவர்கள் மட்டுமே. உலகத்தில் இருக்கின்ற பாதிக்கும் மேற்பட்டவர்களின் வீட்டுக்கு அவர் குரல் ஒரு பாட்டு மூலமாக வாழ்ந்து நமக்கு ஹாய் சொல்லிவிட்டு போய் இருப்பார்
அவர் இப்போது வாய் திறக்க முடியாமல், பாட முடியாமல் மௌனமாக உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரை தட்டி எழுப்புங்கள். மீண்டும் பழைய வீரத்தோடு பழைய பாவனையுடன் பாடல் பாட எல்லாம் வல்ல இறைவனை அணுக வேண்டும். அதற்கு ஒரு கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்