அச்சு அசல் சயீஷாவை போலவே இருக்கும் அவரின் மகள்.... கியூட் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!

திங்கள், 12 ஜூன் 2023 (21:19 IST)
கோலிவுட் சினிமா உலகில் உள்ள பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டு தமிழ் சினிமாவின் பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். மகளை இதுவரை வெளியுலகிற்கு காட்டவில்லை. 
 
திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து தற்போது சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில் ஆர்யா- மனைவி சாயிஷா இருவரும் சேர்ந்து ஜோடியாக நடித்தனர். சயீஷா - ஆர்யா ஜோடிக்கு அழகான பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில் தற்போது ஆர்யா மகளின் லேட்டஸ்ட் கியூட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்