உங்க அப்பா பெயரை கெடுக்குறதுக்குன்னே பொறந்தியா? ஷாருக்கான் மகளை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

திங்கள், 12 ஜூன் 2023 (16:21 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் அவரது மகள் சுஹான கான் பாலிவுட்டில் அறிமுகம் ஆகவுள்ளதாக அவ்வப்போது தகவல் வெளியாகிறது. அதற்காக படு மோசமான கிளாமர் உடையில் பொது வெளியில் வந்து முகம் சுளிக்க வைப்பார். 
 
அதுமட்டும் அல்லாது பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சனின் மகன்  அகஸ்டியாவை ஷாருக்கானின் மகள் சுஹான கான் காதலித்து வருகிறார். இதற்கு இருவீட்டாராம் சம்மதம் கூட தெரிவித்து விட்டார்களாம். 
 
அவ்வப்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அகஸ்டியா வீட்டு விசேஷங்களுக்கு சஹானா கான் கலந்துக்கொள்ளும் போட்டோக்களும் இணையத்தில் வெளியாகியது. இந்நிலையில் சஹானா கான் ஆபாசமான உடையில் போஸ் கொடுத்து முகம் சுளிக்க வைத்துள்ளார். இதனை ஷாருக்கானின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்