நீ மறைந்திருக்கலாம்… ஆனால் மறக்கப்படவில்லை – தங்கை குறித்து உருக்கமாகப் பதிவிட்ட சிம்ரன்!

vinoth

செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (07:30 IST)
தமிழ் சினிமாவில் 90 களின் இறுதியிலும் 2000 தின் தொடக்கத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அவரின் தங்கையான மோனலும் பத்ரி மற்றும் பார்வை ஒன்றே போதுமே உள்ளிட்ட சில தமிழப் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். ஆனால் அவர் கடந்த 2002 ஆம் ஆண்டு திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு காதலில் ஏற்பட்ட பிரச்சனைகள்தான் இந்த தற்கொலை முடிவுக்குக் காரணம் என சொல்லப்படட்து.இது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடிகை சிம்ரன், மோனலின் 23 ஆம் ஆண்டு நினைவஞ்சலியாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் “இந்த 23 ஆண்டுகளாக ஒருநாள் கூட உன்னைப் பற்றி நினைக்காமல் இருந்ததில்லை. நீ மறைந்திருக்கலாம். ஆனால் மறக்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்