சசிகுமாரின் ஃப்ரீடம் படம் பொருளாதார சிக்கலால் ரிலீஸ் தள்ளிவைப்பு!

சனி, 12 ஜூலை 2025 (10:48 IST)
இயக்குனரும் நடிகருமான சசிகுமார் சமீபத்தில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளார்.  அதையடுத்து மீண்டும் இயக்குனராகும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். குற்றப் பரம்பரையினர் சம்மந்தமான கதையை வெப் சீரிஸாக உருவாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில் சத்யசிவா இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஃபிரீடம் திரைப்படம் ஜூலை 10 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொருளாதார சிக்கல் காரணமாக அந்த நாளில் ரிலீஸாகாமல், நேற்றாவது ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்றும் இந்த படம் ரிலீஸாகவில்லை. இதனால் மறுதேதி குறிப்பிடாமல் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்