சமீபத்தில் வெளியான இந்த டிரைலரில் மறைந்த திராவிடர் கழக தலைவர் பெரியாரை நக்கல் செய்வது போல சில வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த டிரைலர் வெளியானதில் இருந்து சமூகவலைதளத்தில் பெரியாரிய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைகளை அடுத்து இப்போது படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதில் இருந்து விலகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை முதலில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவிந்தரன் கைப்பற்றி இருந்ததாகவும், ஆனால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் உள்ளே வந்ததும், அவருக்கு கர்நாடக திரையரங்க உரிமையைக் கொடுத்து தயாரிப்பு நிறுவனம் வெளியேற்றி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.