திருடுவதற்கு ஸ்மார்ட் வொர்க் ரொம்ப முக்கியம்: யோகி பாபுவின் ‘தூக்குதுரை’ டிரைலர்..!

Mahendran

புதன், 17 ஜனவரி 2024 (17:43 IST)
யோகி பாபு நடித்த ‘தூக்குதுரை’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஜனவரி 25ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒரு கிராமத்தில் உள்ள கோவில் சிலையை திருட மொட்டை ராஜேந்திரன் உள்பட ஒரு சில குரூப்புகள் முயற்சி செய்கின்றன. ஆனால் அந்த கிராமத்தில் பேய் உலாவி வருவதாகவும் அந்த கிரீடத்தை திருடவே முடியாது என்றும் அந்த ஊரில் உள்ள மக்கள் கூறுகின்றனர்

ALSO READ: ராமர் கோயில் திறப்புவிழா: சென்னையில் இருந்து சீதைக்கு செல்லும் வாழை நார் சேலை..!

இந்த நிலையில் அந்த ஊருக்கு வரும் யோகி பாபு தனது காதலியை அழைத்துக்கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார்.  இதனை அடுத்து மொட்டை ராஜேந்திரன் குரூப் கிரீடத்தை திருடியதா? யோகி பாபு காதலியை கைப்பிடித்தாரா? என்பதை காமெடி மற்றும் த்ரில் கதை அம்சத்துடன் இந்த படம்  உருவாக்கப்பட்டுள்ளது.
 
இந்த படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் என்பவர் இயக்கி உள்ள நிலையில் மனோஜ் இசையமைத்துள்ளார். காமெடி மற்றும் த்ரில் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்