இஞ்சினியரிங் என்ன நம்ம குலத் தொழிலா? ஆர் ஜே பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ டிரைலர் ரிலீஸ்!

vinoth

வியாழன், 18 ஜனவரி 2024 (14:48 IST)
ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தில் அவர் சலூன் கடை வைத்திருக்கும் நபராக நடித்து வருகிறார் என்பது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் கோகுலுக்கும், ஆர் ஜே பாலாஜிக்கும் கருத்து மோதல் எழுந்து பிரச்சனை உண்டானதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது ஷூட்டிங் முடிந்தும் இருவருக்கும் இடையிலான பிரச்சனை தீரவில்லை என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இந்த படம் ஜனவரி 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்போது படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. அதன்படி இஞ்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு வெற்றிகரமான முடி திருத்துனராக வர ஆசைப்படும் ஒரு இளைஞனின் போராட்டத்தைப் பற்றிய படமாக சிங்கப்பூர் சலூன் இருக்கும் என டிரைலர் கோடிட்டு காட்டுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்