இந்த டிரைலரில் மறைந்த திராவிடர் கழக தலைவர் பெரியாரை நக்கல் செய்வது போல சில வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த டிரைலர் வெளியானதில் இருந்து சமூகவலைதளத்தில் பெரியாரிய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி “மக்கள் மனது புண்படும்படி காட்சிகள் இல்லை. அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. பெரியாரை அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. ஆடியோ வெளியீட்டு விழாவில் சந்தானம் அதற்கு விளக்கம் அளிப்பார்” எனக் கூறியுள்ளார்.