நடிகர் சந்தானம் நடித்த 'DD நெக்ஸ்ட் லெவல்' என்ற திரைப்படம் நாளை (மே 16) வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற 'கோவிந்தா' என்ற பாடல் தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்த பாடலில் திருப்பதி வெங்கடாசலபதியினை பக்தர்கள் பக்தியோடு அழைக்கும் கோவிந்தா என்ற வார்த்தையோடுக் கொண்டு ஒரு நகைச்சுவையான பாடலாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த பாடல் கிட்டதட்ட 80 லட்சம் பேரால் பார்க்கப்பட்டு இருந்தது.
இந்த படம் 1993 ஆம் ஆண்டு ரிலீஸான அர்னால்ட் நடித்த “லாஸ்ட் ஆக்ஷன் ஹீரோ என்ற படத்தின் தழுவலாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. லாஸ்ட் ஆக்ஷன் ஹீரோ திரைப்படம் ரிலீஸின் போது வெற்றி பெறாவிட்டாலும், அதன் பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாகவும் அமைந்துள்ளது.