‘சண்டக்கோழி 2’வும் ரிலீஸுக்கு ரெடி!

Webdunia
சனி, 14 ஏப்ரல் 2018 (15:36 IST)
விஷால் நடிப்பில் ‘சண்டக்கோழி 2’வும் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறதாம். 
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘இரும்புத்திரை’. சமந்தா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறைக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட இந்தப் படம், இதுவரை ரிலீஸாகவில்லை.
 
இந்நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘சண்டக்கோழி 2’ படமும் ரிலீஸுக்குத் தயாராகி விட்டதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்தில்  விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.
 
அதுமட்டுமல்ல, முதலில் ராஜ்கிரண் போர்ஷன் கொஞ்சம்தான் இருந்திருக்கிறது. ஆனால், ‘பவர் பாண்டி’யின் வெற்றிக்குப் பிறகு அதை அதிகமாக்கி விட்டாராம்  லிங்குசாமி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்