3 நாட்களில் முத்தரப்பு பேச்சுவார்த்தை: விஷால்!

வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (18:01 IST)
புதிய படங்களை திரையிட டிஜிட்டல் சேவை அமைப்பினர் அதிகம் கட்டணம் வசூலிப்பதால் அதை குறைக்க கோரி தயாரிப்பாளர்கள் கடந்த மதாம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 
படத் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளன. இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. 
 
இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு திரையுலகினரின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு சார்பில் தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என் தெரிவித்தார். 
 
இதை தொடர்ந்து, தியேட்டர்களில் டிக்கெட்டுகளை கம்ப்யூட்டர் மயமாக்கவும், டிஜிட்டல் சேவை கட்டணங்களை குறைக்கவும் வலியுறுத்தி உள்ளோம். 
 
சினிமா பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என விஷால் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்