70 வயது பாட்டியாக நடிக்கும் சமந்தா " மிஸ் கிராணி "

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (15:26 IST)
திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தெலுங்கு, தமிழ் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.  
 
தெலுங்கு இயக்குனர் நந்தினி ரெட்டி சமந்தாவை வைத்து படம் இயக்கவுள்ளதாக ஒரு  செய்தி சில நாட்களுக்கு முன்னரே வெளிவந்தது. தற்போது அந்த படத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. 
 
அதாவது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்க கூடிய விதமாக நடிகை சமந்தா இந்த படத்தில் 70 வயது பாட்டியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படம் மிஸ் கிராணி என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக உருவாகிறது.
 
மேலும், படத்தின் மையக்கரு மரமான போட்டோ சூட்  ஒன்றில் 70 வயது பாட்டியான சமந்தா புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது 20 வயது இளம் பெண்ணாக மாறிவிடுவாராம். அதற்கு பிறகு நடக்கும் மர்மங்கள் நிறைந்த திருப்பமே படத்தின் சுவாரஸ்யம். 
 
இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு நடிகை சமந்தா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.ஆதலால்  இந்த படத்தின் மூலமாக ஒரு வித்யாசமான சமந்தாவை பார்ப்போம் என ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்