சமந்தா நடிக்கும் ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

vinoth

செவ்வாய், 28 அக்டோபர் 2025 (10:21 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா புகழின் உச்சத்தில் இருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டதால் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டுள்ளார். தமிழில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’.

சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அவர்களின் விவாகரத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. விவாகரத்துக்குப் பிறகு நாக சைதன்யா சக நடிகை சோபிதா துலிபாலாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் சமந்தா தற்போது வரை ‘சிங்கிள்’ ஆக இருக்கிறார். இதற்கிடையில் அவர் பேமிலி மேன் இயக்குனர் ராஜ் நிடிமோரைக் காதலிப்பதாகவும் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக புதிய படம் எதிலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த சமந்தா ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையோடு நேற்று ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்