பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் போலியான வீடியோ, ஆபாச தளங்களில் பதிவு செய்யப்பட்டு இருப்பதால், அதிர்ச்சி அடைந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனது புகைப்படங்களை டீப் ஃபேக் (Deepfake) வீடியோவாக போலியாக உருவாக்கி ஆபாச தளங்களில் சில மர்ம நபர்கள் வெளியிட்டுள்ளதாகவும், அவ்வாறு வெளியிட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் நடிகர் சிரஞ்சீவி புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த சதி செய்ய முயற்சிப்பதாகவும், இந்த சதியின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், டீப் ஃபேக் போலி வீடியோவாக உருவாக்கப்பட்ட அனைத்து வீடியோக்களையும் நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் ஹைதராபாத் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.