இது கோவில் இப்படியெல்லாம் செய்ய கூடாது.. திருப்பதியில் ரசிகர்களை கண்டித்த அஜித்..!

Siva

செவ்வாய், 28 அக்டோபர் 2025 (09:03 IST)
நடிகர் அஜித் இன்று திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், அவரை பார்த்த ரசிகர்கள் கூச்சலிட்டபோது, "இது கோயில், இப்படி எல்லாம் செய்யக் கூடாது" என ரசிகர்களை கண்டித்த விதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நடிகர் அஜித் இன்று திருப்பதியில் ஏழுமலையானை சுப்ரபாத சேவையில் வழிபாடு செய்தார். அப்போது, ஆர்வம் மிகுதியால் அவரை கண்ட ரசிகர்கள் "தல, தல" என கத்தியபோது, அவர்களை கண்டித்த அஜித், "இது கோவில், இப்படி எல்லாம் செய்யக் கூடாது" என்று கூறினார்.
 
மழை கொட்டியபோதிலும், ஒரு சில ரசிகர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுக்க வந்தபோது அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, போனை வாங்கி அவரே செல்பி எடுத்துக் கொடுத்தார். இருப்பினும், ஒரு சிலர் விசிலடித்ததால் அதிர்ச்சி அடைந்த அஜித், ரசிகர்களை கண்டித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
 
அஜித் திருப்பதியில் சுவாமி வழிபாடு செய்தது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்