ஒரு ரெட்டிட் பயனர் பகிர்ந்த கதையின்படி, அவரது உறவுக்காரப் பெண், 2022-ல் ஒரு நடுத்தர வர்க்க கடை உரிமையாளரை மணந்தார். குழந்தை பிறந்த பிறகு, கணவர் வீட்டிற்கு திரும்ப மறுத்த அவர், கணவர் போதுமான பணம் சம்பாதிப்பதில்லை, வெளிநாட்டு பயணங்களுக்கு அழைத்து செல்வதில்லை, தான் விரும்பிய "இன்ஸ்டாகிராம் வாழ்க்கை" கிடைக்கவில்லை என்று குறை கூறுகிறார். முதல் திருமணத்தை விரைவிலேயே முறித்துக்கொண்ட அவர், இப்போது குழந்தையுடன் இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்ய விரும்புகிறார்.
இந்த சம்பவம், சமூக ஊடகங்கள் திருமண உறவுகளில் ஏற்படுத்தியுள்ள எதிர்மறை தாக்கம் குறித்து பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. பல இணைய பயனர்கள், ஆடம்பர வாழ்க்கை தேவை என்றால் அதை தாங்களே சம்பாதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து, அந்த பெண்ணின் யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகளை கடுமையாக விமர்சித்துள்ளனர்.