இந்த நாட்கள் சிறப்பானவை… இன்ஸ்டாகிராமில் புது ஆல்பத்தைப் பதிவிட்ட சமந்தா!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (13:39 IST)
நடிகை சமந்தா. விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சொல்லப்போனால் முன்பை விட இப்போது பிஸியான நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் ரிலீஸானது. அடுத்து குஷி மற்றும் சிட்டாடல் ஆகிய படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

இவையில்லாமல் இப்போது புதிதாக ஒரு ஆங்கில படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் அந்த படத்துக்கு சென்னை ஸ்டோரி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  சென்னையில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் எழுதிய ‘அரேஞ்ச்மெண்ட் ஆஃப் லவ்” என்ற நாவலை ஒட்டி இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்