பேபி ஜான் படத்தில் கௌரவ வேடத்தில் சல்மான் கான்..!

vinoth
திங்கள், 7 அக்டோபர் 2024 (09:18 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’தெறி’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஹிந்தியில் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை அட்லி மற்றும் இன்னொரு பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் கடந்த வாரம் ஒரு முக்கியக் காடசியைப் படமாக்கி படத்தில் இணைத்துள்ளனர்.

இந்தக் காட்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கான் கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படம் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்