நான் எந்த போட்டியிலும் இல்லை… மெய்யழகன் சக்ஸஸ் மீட்டில் அரவிந்த்சுவாமி பேச்சு!

vinoth
திங்கள், 7 அக்டோபர் 2024 (09:13 IST)
கார்த்தி மற்றும் அரவிந்த்சுவாமி நடிப்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ள மெய்யழகன் செப்டம்பர் 27 ஆம் தேது உலகம் முழுவதும் ரிலீஸானது. ரிலீஸுக்கு முன்பே இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. படம் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆனால் படத்தின் மீதான விமர்சனமாக வைக்கப்பட்டது படத்தின் நீளமும், இரண்டாம் பாதி கதையை விட்டு விலகி செல்வதும்தான். அதையடுத்து படத்தின் நீளம் 18 நிமிடம் அளவுக்குக் குறைக்கப்பட்டு இப்போது கணிசமான திரைகளில் ஓடிவருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசிய அரவிந்த்சுவாமி “இந்த படத்தில் கார்த்தியின் நடிப்புப் பாராட்டப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. இயக்குனர் கேட்டதைதான் நானும் கார்த்தியும் கொடுத்தோம். நான் மற்றவர்களுக்கு போட்டியாக நடிப்பதில்லை. நான் அதிகமாகப் படங்களில் கூட நடிப்பதில்லை. அது உங்களுக்கே தெரியும்.  செய்யும் வேலையை ரசித்து செய்யவேண்டும். இதுபோன்ற ஒரு அழகிய சூழலில் வேலை செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்