இறந்தவர் குடும்பத்துக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்… ஜாமீனில் வெளிவந்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி!

vinoth

சனி, 14 டிசம்பர் 2024 (10:19 IST)
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை சம்பந்தப்பட்ட சந்தியா தியேட்டர் மீதும், அல்லு அர்ஜுன் மீதும் பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீஸார் கைது செய்து விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற விசாரணைக் காவல் விதிக்கப்பட்டது. உடனடியாக அவர் உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க்கப்பட்டது. ஆனாலும் அவர் இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டு இன்று காலைதான் விடுதலை செய்யப்பட்டார். ஜாமீன் கிடைத்தாலும் அதற்கான விதிமுறைகள் முடிந்து அவர் ரிலீஸாவதற்குத் தாமதம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜாமீனில் இருந்து வந்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “நான் இன்னொரு முறை இறந்தவரின் குடும்பத்துக்கு இரங்கலைத் தெரிவித்து வருகிறேன். என்னுடைய 20 வருட திரைப்பயணத்தில் எல்லா படங்களின் ரிலீஸீன் போதும் நான் தியேட்டருக்கு சென்றுள்ளேன். ஆனால் இந்த முறை இப்படி ஒரு சம்பவம் நடந்தது வருத்தமானது. இறந்தவரின் குடும்பத்துக்கு துணையாக இருப்பேன். என்னைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. நான் நலமாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்