மலர் டீச்சர் படத்தின் மட்டமான டிரைலர் ... ரசிகர்கள் கொந்தளிப்பு!!!

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (13:23 IST)
மலையாளத்தில் சாய்பல்லவி நடிக்கவிருக்கும் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேமம் படம் மூலம் வேர்ல்ட் ஃபேம்ஸ் ஆனவர் தான் சாய் பல்லவி. அதிலும் அவரின் மலர் டீச்சர்கேரக்டர் பெயரான  பட்டி தொட்டியெங்கும் ஃபேமசானது. ஆனால் அதனை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
 
இந்நிலையில் மலையாளத்தில் பஹத் பாசில் ஹீரோவாக நடிக்கும் அதிரன் படத்தில் சாய்பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். ஹாரர் ஜார்னரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சாய்பல்லவி பேயாக நடித்துள்ளாராம்.
 
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கடுப்படைய செய்துள்ளதாம். ஆம் டிரைலரில் சாய்பல்லவியின் நடிப்பு மோசம், அவரிடத்தில் துளியளவும் ரொமான்ஸ் இல்லை என மலையாள ரசிகர்கள் சாய்பல்லவி மீது கடுப்பில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்