பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி… எந்த படத்தில் தெரியுமா?

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (17:19 IST)
தெலுங்கில் ரீமேக் ஆக உள்ள அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளாராம்.

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

இந்த படத்தை பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்ய போட்டிகள் நிலவி வருகின்றன. தெலுங்கில் முன்னணி நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாக அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. படத்தின் அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார். கோஷி கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது. வரிசையாக பவன் கல்யாண் ரீமேக் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். கதைப்படி ஒரு நக்சல் பெண்ணை அய்யப்பன் கதாபாத்திரம் திருமணம் செய்துகொண்டிருக்கும். மற்றப்படி வழக்கமான மசாலா படங்களில் வருவது போல் டூயட் எல்லாம் இருக்காது. ஆனால் நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரம் என்பதால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்