ஆனால் அதற்குள் தமிழகத்தில் பருவமழை பெய்து புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் கோட் படத்தை பார்க்க இயக்குனர் வெங்கட்பிரபுவோடு வந்த விஜய்யின் தந்தை, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரனை சுற்றிவளைத்த பத்திரிக்கையாளர்கள் விஜய்யின் மாநாடு பற்றி உங்கள் கருத்து என்ன?” எனக் கேட்டனர்.
அதற்கு நக்கலாக பதிலளித்த எஸ் ஏ சி “இவருதான் மாநாடு படம் எடுத்தவர்.” என வெங்கட்பிரபுவை நோக்கிக் கைகாட்டிவிட்டு எஸ்கேப் ஆனார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கும், அவர் தந்தைக்கும் சுமூகமான உறவில்லை என சொல்லப்படுகிறது. இதை எஸ் ஏ சி யே பல பேட்டிகளில் ஒப்புக்கொண்டும் உள்ளார். கட்சி ஆரம்பிப்பதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.