சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் உரிமையை எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தை, மோகன் ராஜா இயக்கியுள்ளார். மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து சினேகா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையில் இந்தப் படம் ரிலீஸாக உள்ளது. இந்தப் படத்தின் வட ஆற்காடு மற்றும் தென்னாற்காடு விநியோக உரிமையை எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் வாங்கியுள்ளார். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் எஸ் பிக்சர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.