ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து தரும் சிவகார்த்திகேயன் - நயன்தாரா

வெள்ளி, 20 அக்டோபர் 2017 (18:33 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அறம் மற்றும் இமைக்கா நொடிகள் திரைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடித்த 'வேலைக்காரன்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.



 
 
மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் வெளிவரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவில் விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்