புதிய காதல் உலகத்துக்குள் நம்மை விக்னேஷ் சிவன் அழைத்து செல்வார்.. LIC குறித்து எஸ் ஜே சூர்யா பதிவு!

சனி, 23 டிசம்பர் 2023 (14:17 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் இந்த படத்தை  முதலில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலக, லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் க்ரீத்தி ஷெட்டி மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் படம் பற்றி எஸ் ஜே சூர்யா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “புது காதல் உலகத்துக்கு அழைத்து செல்வதில் விக்னேஷ் சிவன் மும்முரமாக இருக்கிறார். தற்போது தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் தலைப்பு போலவே படமும் நம்மை ஆச்சர்யப்படுத்தும்.  நேற்று 12 மணிநேரம் படம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்