ஹீரோ ஆயிட்டோம்ல இனிமே லுக்கே வேற… சிகிச்சை எடுக்கும் ப்ரதீப் ரங்கநாதன்!

சனி, 9 டிசம்பர் 2023 (07:25 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் இந்த படத்தை  முதலில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலக, லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு பட்ஜெட்டாக 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் நடிக்க பிரதீப்புக்கு 15 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளம் பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது ஹீரோ ஆகிவிட்டதால் தன்னுடைய லுக்குக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளாராம். தன்னுடைய தோற்றத்தை பொலிவுற செய்ய இப்போது சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்