தூக்கிவிட்ட ஏஜிஎஸ் நிறுவனத்திடம் சம்பளத்தில் கறார் காட்டிய ப்ரதீப் ரங்கநாதன்!

வியாழன், 21 டிசம்பர் 2023 (07:52 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தை  முதலில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலக, லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் இந்த படத்துக்கு பட்ஜெட்டாக 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்துக்குப் பிறகு ப்ரதீப் ஓ மை காட் திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்காக ப்ரதிப் ரங்கநாதன் 10 கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டுள்ளாராம். லவ் டுடே என்ற படத்தின் மூலம் தன்னை தூக்கிவிட்ட நிறுவனத்திடமே சம்பள விஷயத்தில் மிகவும் கறாராய் இருந்துள்ளாராம் ப்ரதீப் ரங்கநாதன். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்