கீர்த்தி சுரேஷ் அணிருத் திருமணமா? கோலிவுட்டில் பரவும் வைரல் செய்தி!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (08:04 IST)
நடிகை கீர்த்தி சுரேஷும் இசையமைப்பாளர் அனிருத்தும் திருமணம் செய்யப்போவதாக வதந்தி தமிழ் சினிமா வட்டாரத்தில் பரவிவருகிறது.

நடிகர் கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் அனிருத்தும் நெருங்கிய நண்பர்களாக நீண்ட காலமாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த அனிருத்தின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட கீர்த்தி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார்.

அதில் இருந்து இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இப்போது இருவரும் திருமணமே செய்து கொள்ள போவதாக வதந்திகள் பரவ ஆரம்பித்துள்ளன. ஆனால் அதில் எள்ளளவும் உண்மை இல்லை என்று கூறுகின்றனர் கீர்த்தி சுரேஷுக்கு நெருக்கமானவர்கள். அதற்குக் காரணம் கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே ஒருவரை காதலித்து வருவதுதான் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்