லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் மாஸ்டர். கடந்த பொங்கல் தினத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் ,லோகேஷின் படங்களில் எடிட்டராகப் பணிபுரிந்து வருபவர் ஃபிலோமின்ராஜ். இவர் ஏற்கனவே கைதி, மாநகரம், மஸ்டர், விஷ்ணுவிஷாலின் ராட்சசன் உள்ளிட்ட படங்களி; எடிட்டராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் தனது காதலி திவ்யா பிரதீபா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியர்க்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
அதில், இன்று முதல் புதிய பாதையில் ஆரம்பிக்கவுள்ள ஃபிலோமின்ராஜ் மற்றும் திவ்ய பிரதீபாவிற்கு எனது வாழ்த்துகள். புதிய பயணம் இனிதே மகிழ்ச்சியுடம் தொடங்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.