"வரலாற்று சாதனை படைத்த ரவுடி பேபி" - திக்குமுக்காடிப்போன தயாரிப்பு நிறுவனம்!

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (12:57 IST)
‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த வருடம் டிசம்பர் 21ம் தேதி திரைக்கு வந்த படம் ‘மாரி 2’ . இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ரவுடிய பேபிய பாடல் உலகம் முழுக்க பரவலாக பேசப்பட்டது. தனுஷ் சாய் பல்லவியின் நடனம் குட்டி குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. 


 
யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார். அற்புதமான பாடல்வரிகளை கொண்டிருந்த ரவுடி பேபி பாடல் நடனத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்தது.  மாரி 2 படம் ஓரளவிற்கு மட்டுமே பேசப்பட்டிருந்தாலும்  ரவுடி பேபி பாடல் வெளியான நாளில் இருந்தே உலகம் முழுக்க ஃபேமஸ் ஆகியது. 
 
படம் வெளியான வெறும் 8 மாதங்ககளில் 600 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்திழுத்து தொடர் சாதனையை நிகழ்த்திவருகிறது. தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வைகளைப் பெற்றுள்ள ‘ரவுடி பேபி’ பாடல் இன்னும் 3 மாதங்களுக்குள் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அபார சாதனை நிகழ்த்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம்  ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த வரவேற்ப்பை எண்ணி திகழ்ந்து விட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்