விஜய்யுடன் மோதும் தனுஷ் – தீபாவளி பட்டாஸ் !

திங்கள், 29 ஜூலை 2019 (13:42 IST)
தீபாவளிப் பண்டிகைக்கு விஜய்யின் பிகில் படத்தோடு தனுஷின் பட்டாஸ் படமும் வர இருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் அட்லி இயக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் பிகில் படம் தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இதற்காகப் படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது. ஏற்கனவே மெர்சல், சர்கார் படங்கள் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் இப்போது தனுஷின் பட்டாஸ் படமும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பா, மகன் என இருவேடங்களில் தனுஷ் நடிக்கும் இந்தப் படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

ஏற்கனவே தனுஷ் விஜய் படங்கள் ஐந்துமுறை இதுபோல பண்டிகைக் காலங்களில் மோதியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்