மீண்டும் டிரெண்ட் லிஸ்டில் ரவுடி பேபி: என்னவா இருக்கும்?

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (13:29 IST)
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மாரி 2.
இந்த படம் சுமார்தான் என்றாலும், யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ரவுடி பேபி பாடல் ரசிகர்கல் மத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த பாடல், யூடியூபில் வைரலாகி டிவிட்டரில் டிரெண்டானது. 
 
இந்த பாடல் இரண்டு மில்லயன் வியூஸ் கடந்து சாதனை படைத்தது. இந்நிலையில் இப்போது மீண்டும் ரவுடி பேபி பாடல் டிவிட்டர் டிரெண்ட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. ஆம், ரவுடி பேபி பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதால், மீண்டும் ரவுடி பேபி டிரெண்டாகி வருகிறது. 
 
இந்த பாடல் இவ்வளவு ஹிட் ஆனதற்கு யுவனின் இசை, தனுஷ் - சாய் பல்லவி நடனம், நடன இயக்குனர் பிரபு தேவாவின் நடன அசைவுகள் அனைத்தும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 
 
இதோ அந்த மேக்கிங் வீடியோ...
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்