என்ன ஆனது தனுஷ் – கார்த்திக் சுப்பராஜ் படம் ?

சனி, 23 பிப்ரவரி 2019 (10:07 IST)
தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் இணைவதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் என்ன ஆனது என்ற கேள்வி கோலிவுட்டில் எழ ஆரம்பித்துள்ளது.

இறைவிப் படம்  முடிந்து சில சர்ச்சைகள் வேகமாகப் பரவி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு ரெட் கார்ட் போடப்பட இருப்பதாக தகவல்கள் உலாவந்து கொண்டிருந்த போது தைரியமாக தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் சொன்ன கதைக்கு ஓகே சொன்னார்.

ஆனால் என்னக் காரணங்களோ அந்தப் படம் அதன் பின் அடுத்தக் கட்டத்தை எட்டவில்லை. இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் பிரபுதேவா நடிப்பில் மெர்க்குரி மற்றும் ரஜினி நடிப்பில் பேட்ட ஆகியப் படங்களை இயக்கி முடித்துள்ளார். தனுஷும் தனது பட வேலைகளில் பிஸியாகி விட்டார்.

இந்நிலையில் இப்போது கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்தப் படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கதைதான் தனுஷுக்கு சொன்ன கதை என்று தெரிகிறது. அதனால் கதை எழுதி முடிக்கப்பட்டவுடன் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பேட்ட படத்தில் கார்த்திக் சுப்பராஜின் சுறுசுறுப்பான வேலைத்திறனைப் பார்த்துவிட்டு ரஜினி மீண்டும் கார்த்திக் சுப்பராஜுக்கு மீண்டும் ஒருப் படத்திற்கான கால்ஷீட் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் இப்போது எழுதிவரும் கதை ரஜினிப் படத்திற்கானதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்