கரீனா கபூர் மீண்டும் கர்ப்பமா?

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (12:27 IST)
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் கடந்த 2012-ல் நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டார்.


 
இவர் திருமணத்துக்கு பிறகு  தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த ஜோடிக்கு தைமூர் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கரீனா கபூர் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் பட உலகில் தகவல் பரவியது. 
 
வயிறு பெரிதாக இருப்பது போன்ற புகைப்படமும் வலைத்தளத்தில் வைரலானது. ஆனால் கரீனா கபூர்  தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
இது குறித்து அவர்கள் கூறும்போது, “கரீனா கபூர் ஒரு படத்தில் வாடகைத்தாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் அக்‌ஷய்குமாரும் நடிக்கிறார். இந்த படத்தில் கர்ப்பமான பெண்போல் அவர் நடித்த புகைப்படம்தான் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது” என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்