சீனியர்களை மதிக்கவில்லையா திமுக ? கு க செல்வம் கட்சித்தாவல் சொல்வது என்ன?

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (15:16 IST)
திமுகவைச் சேர்ந்த எம் எல் ஏவான கு க செல்வம் பாஜகவுக்கு தாவ இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க செல்வம் பாஜகவில் இன்று மாலை இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த செய்தி திமுக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த மாறலுக்கான காரணம் வெளியாகியுள்ளது. அதாவது மறைந்த ஜெ.அன்பழகன் பொறுப்பில் வருவதற்கு திமுகவில் கடுமையான போட்டி நிலவிய சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டார்.  

சிற்றரசு வயதில் மிக இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவில் கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்கள் பலர் இருக்க உதயநிதி ஆதரவு இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக சிற்றரசுக்கு பதவி கொடுத்தது பலரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது. இதனால் பலரும் அதிருப்தியில் இருந்தாலும் கு க செல்வம் மட்டும் கட்சியை விட்டே செல்ல மற்றொரு காரணமும் இருக்கிறது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தான் இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் நிற்க அவருக்கு வாய்ப்புக் கிடைக்காது என உறுதியாக தெரிந்துவிட்டதாம். அதனால் தான் இப்போது இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்