சென்னையில் விடிய விடிய மழை.. இன்றும் தமிழகம் முழுவதும் மழை பெய்யும்.. ரயில், விமானங்கள் மாற்றம்..!

Siva

செவ்வாய், 28 அக்டோபர் 2025 (08:56 IST)
மோன்தா புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் நிலையில், சென்னையில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், மோன்தா புயல் காரணமாக சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆந்திரா, கடற்பகுதி வழியே செல்லும் பல ரயில்களும் தாமதமாக புறப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. ஆந்திராவின் நகரங்களில் இருந்து இன்று சென்னைக்கு வர இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்