இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth K

திங்கள், 27 அக்டோபர் 2025 (18:10 IST)

வங்கக்கடலில் மோன்தா புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று இரவு 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

வங்கக்கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை தீவிர புயலாக ஆந்திராவில் கரையை கடக்கிறது. அதை தொடர்ந்து வட தமிழக மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டது.

 

இந்நிலையில் இன்று மாலை, இரவு நேரங்களில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்