அடங்காத பார்வதி! ராணுவ ஆட்சியை அமல்படுத்திய ப்ரவீன்! பிக்பாஸ் வீட்டில் ரணகளம்!

Prasanth K

செவ்வாய், 28 அக்டோபர் 2025 (10:41 IST)

பிக்பாஸ் வீட்டின் பரபரப்பான நான்காவது வாரத்தில் வீட்டு தல பொறுப்பேற்றுள்ள ப்ரவீன் காட்டி வரும் அதிரடிகள் சுவாரஸ்யத்தை அளிக்கின்றன.

 

முன்னதாக வீட்டு தலயாக துஷார் சரியாக செயல்படவில்லை. கனி போன வாரம் வீட்டு தலயாக இருந்தபோதிலும் ஹவுஸ்மேட்ஸை கட்டுப்படுத்துவதில் முக்கியமாக பார்வதியை கட்டுப்படுத்துவதில் மிகவும் சிரமப்பட்டார். நாளாக நாளாக வீட்டை சரியாக லீட் செய்வது வீட்டு தலயின் வேலையாக இல்லாமல், விஜே பாருவை சமாளிப்பதே மெயின் வேலையாகி வருகிறது.

 

இப்படிப்பட்ட சூழலில் வீட்டு தல பொறுப்பேற்றுள்ள ப்ரவீன் ஆரம்பம் முதலே பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளித்து வருகிறார். யாராவது இரண்டு பேருக்கு இடையே வாக்குவாதம் எழுந்து கலவரமாக மாறும் நிலையில் அவர்களை தனியே அழைத்து பேசி பஞ்சாயத்து செய்கிறார். வீட்டை ஒழுங்குப்படுத்துவதில் அவர் என்ன செய்வார் என்பது இனிதான் தெரியும்

 

எனினும் இன்றைய ப்ரோமோவில் பாருவை விட சத்தமாக பேசி அவரை ஆஃப் செய்துள்ளார் ப்ரவீன். வீட்டு தலயாக அவர் போட்ட கண்டிஷன்ஸை எதிர்த்த பாரு ‘என்ன ஆர்மி கேம்ப் நடத்துறீங்களா?” என கேட்க, நான் தான் வீட்டுத்தல.. என் ரூலிங் அப்படிதான் இருக்கும். ஆர்மி கேம்ப்தான் என நெத்தியடியாக அடித்துள்ளார் ப்ரவீன். 

 

வழக்கமாக தனக்கு எதிராக ஒரு சொல் பேசிவிட்டாலும் அவர்களை தனது எதிரி லிஸ்ட்டில் சேர்த்துவிடும் பாரு, இந்த வாரம் ப்ரவீனுக்கு நிறைய குடைச்சல் கொடுப்பார் என தெரிகிறது.

 

Edit by Prasanth.K

#Day23 #Promo1 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/hQxG60tv1s

— Vijay Television (@vijaytelevision) October 28, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்