சற்றுமுன் வெளியான தகவல்.. தீவிர புயலாக மாறிய மோன்தா.. 5 மாவட்ட மக்கள் ஜாக்கிரதை..!

Siva

செவ்வாய், 28 அக்டோபர் 2025 (09:07 IST)
வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
புயலாக வலுப்பெற்றுள்ளதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் ஆந்திரக் கடற்கரையோர நகரங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது மோன்தா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திராவின் மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே இன்று இரவு தீவிர புயலாக கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஆந்திர அரசு புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், மோன்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, மேற்கண்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்