ஹாலிவுட் படத்தில் நடிக்கும் 'பாகுபலி' நடிகர்

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (05:01 IST)
பாகுபலி, பாகுபலி 2' படத்தின் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் பிரபாஸ். அவரை போலவே பல்வாள்தேவன் கேரக்டரில் நடித்த ராணாவுக்கும் இந்த இரண்டு படங்களால் நல்ல பெயர் கிடைத்தது. இந்த நிலையில் ராணா, காஜல் அகர்வால் நடித்த 'நான் ஆணையிட்டால் திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது.



 
 
இந்த நிலையில் ராணா, ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. டைட்டானிக் கப்பல் மூழ்கியது போல, கடந்த 1888ஆம் ஆண்டு விஜில் என்ற கப்பல் நடுக்கடலில் திடீரென காணாமல் போனது. இந்த கப்பல் கடலில் மூழ்கியிருக்கலாம் என்றும், அதில் பயணம் செய்த அத்தனை பேரும் மரணம் அடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இன்று வரை உறுதி செய்யப்படவில்லை
 
இந்த சம்பவத்தை மையமாக வைத்து 'விஜில் தி மிஸ்ட்ரி ஆஃப் தி ஃபாண்டம் ஷிப்' என்ற பெயரில் உருவாகும் ஹாலிவுட் படத்தில் நடிக்க ராணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லண்டன் நிறுவனம் ஒன்று தயாரிக்கும் இந்த படம் அடுத்த வருடம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்